இரண்டு தினங்களுக்கு முன்னர் இந்தியாவையே உலுக்கிய டாக்டர் பிரியங்கா ரெட்டி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் ஹைதராபாத் – பெங்களூரூ சாலையில் அரங்கேறியது. இந்த கோர சம்பவத்தை நிகழ்த்திய 4 குற்றவாளிகள் தற்போது கைது செய்யப்பட்டு விட்டனர். இந்த எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பற்றி ஹைதராபாத் காவல் ஆணையர் சஞ்சனார் கூறுகையில் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார்.
ஷம்ஷாபாத் பகுதியை சேர்ந்த டாக்டர் பிரியங்கா ரெட்டி கொல்லூரில் உள்ள கால்நடை மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார். இவர் எப்போதும் வேலைக்கு செல்கையில் தனது இருசக்கர வாகனத்தின் மூலம் ஷம்சாபாத்திலிருந்து ஷின்ஷாபள்ளி டோல்கேட் வரை சென்று அந்த டோல்கேட்டில் வண்டியை நிறுத்திவிட்டு அங்கிருந்து பொது போக்குவரத்து மூலம் கொல்லூரில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு செல்வது வழக்கம்.
சம்பவத்தன்று மாலையில் 6 மணி அளவில் ஒரு அவசர வேலையாக டாக்டர் பிரியங்கா ரெட்டி அந்த ஷின்ஷாப்பள்ளி டோல்கேட் சென்று தனது வண்டியை நிறுத்தியுள்ளார். இதனை கண்காணித்த அந்த கொடூர கும்பல், டாக்டர் அந்த இடத்திலிருந்து மருத்துவமனைக்கு செல்வதை உறுதி செய்தனர். பின்னர் பிரியங்காவின் வண்டியை பஞ்சர் ஆக்கினார்.
அதன் பின்னர் பிரியங்கா ரெட்டி மருத்துவமனைக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்க்கையில் தனது வண்டி பஞ்சர் ஆனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன் பின்னர் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த பொழுது அந்த கொடூர கும்பலிலிருந்து லாரி டிரைவர் முகமது ஆஷா மற்றும் அந்த லாரி டிரைவரின் உதவியாளர் சிவா ஆகியோர் டாக்டருக்கு உதவி செய்வதாக கூறி அந்த வண்டியை தூக்கிச் சென்றனர்.
பின்னர் பிரியங்கா ரெட்டி தனது சகோதரிக்கு போன் செய்துள்ளார். அவர் அப்போது வரை நடந்தவற்றை கூறியுள்ளார். தனது வண்டியை இருவர் பஞ்சர் பார்த்து தருவதாக கூறி வாங்கி சென்று விட்டனர். எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது என்பது போல பிரியங்கா ரெட்டி தனது சகோதரரிடம் போனில் கூறியுள்ளார்.
பிரியங்கா ரெட்டி தகவல் கூறிய சில மணி நேரத்தில் அவரது போன் சுவிட்ச் ஆப் ஆகி உள்ளது. அந்த நேரம் லாரி டிரைவர் முகமது ஆஷா, சிவா, சின்ன கேசவலு, நவீன் ஆகியோர் பிரியங்காவை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பிறகு பிரியங்காவின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டனர்.
பின்னர்பிரியங்காவின் உடலை தார்பாயில் சுருட்டி பெங்களூருவில் – ஹைதராபாத் செல்லும் நெடுஞ்சாலையில் ஒரு பாலத்திற்கு அடியில் சென்று தீ வைத்து எரித்து விட்டனர். பின்னர், அங்கிருந்து நால்வரும் தப்பி ஓடிவிட்டனர்.
அதே நேரம் ப்ரியங்கா ரெட்டியின் பெற்றோர் போலீசாருக்கு தகவல் தெரிவித்து இருந்தனர். போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஹைதராபாத் பெங்களூர் நெடுஞ்சாலையில் ஒரு பாலத்திற்கு அடியில் பிணம் இருப்பதை கண்டறிந்து, அது பிரியங்கா ரெட்டியின் உடல்தான் என அவரது சகோதரி மூலம் உறுதி செய்தனர். பின்னர், பெட்ரோல் பங்க் மற்றும் சுங்கச்சாவடி சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து இந்த கோரச் சம்பவத்தை நிகழ்த்திய அந்த நால்வரையும் துரித தேடுதல் வேட்டைக்குப் பின்னர் கைது செய்தனர். தற்போது அவர்கள் சிறையில் உள்ளனர்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…