ஷம்ஷாபாத் பகுதியை சேர்ந்த டாக்டர் பிரியங்கா ரெட்டி கொல்லூரில் உள்ள கால்நடை மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார்.இவர் எப்போதும் வேலைக்கு சென்றாலும் டோல்கேட் வரை சென்று அங்கு வண்டியை நிறுத்திவிட்டு பிறகு பேருந்து மூலம் கொல்லூரில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு செல்வது வழக்கம்.
சம்பவத்தன்று மாலையில் 6 மணி அளவில் ஒரு அவசர வேலையாக டாக்டர் பிரியங்கா ரெட்டி அந்த ஷின்ஷாப்பள்ளி டோல்கேட் சென்று தனது வண்டியை நிறுத்தியுள்ளார்.இதனை கண்காணித்த 4 பேர் கொண்ட கும்பல் பிரியங்கா மருத்துவமனைக்கு செல்வதை உறுதி செய்தனர். பிரியங்காவின் வண்டியை பஞ்சர் ஆக்கினார்.
பின்னர் பிரியங்காவின் வண்டியை பஞ்சர் பார்த்து தருவதாக கூறி லாரி டிரைவர் முகமது ஆஷா, சிவா, சின்ன கேசவலு, நவீன் ஆகியோர் பிரியங்காவை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பிறகு பிரியங்காவின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டனர்.
இதையடுத்து பிரியங்காவின் உடலை தார்பாயில் சுருட்டி பெங்களூருவில் – ஹைதராபாத் செல்லும் நெடுஞ்சாலையில் ஒரு பாலத்திற்கு அடியில் சென்று தீ வைத்து எரித்து விட்டனர். இந்த சம்பவம் தெலங்கானா மாநிலத்தையை உலுக்கியது.
இந்நிலையில் பிரியங்கா காணவில்லை என அவரது பெற்றோர்கள் ஷம்ஷாபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர்.முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய தாமதப்படுத்தியதாக குற்றசாட்டு எழுந்து உள்ளது.இது குறித்து சைபராபாத் காவல் ஆணையர் நடத்திய விசாரணையில் உதவி ஆய்வாளர் ரவிக்குமார்,தலைமை காவலர்கள் வேணுகோபால் மற்றும் சத்ய நாராயண கவுடா ஆகியோர் பணி இடை நீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளனர்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…