உ.பி:வன்முறையால் பலியான விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்க சென்றபொழுது பிரியாங்கா காந்தி கைது
லக்கிம்பூர் வன்முறையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்க சென்றபொழுது காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியாங்கா காந்தி கைது .
உத்திரபிரதேசம் லக்கிம்பூரில் விவசாயிகள் போராட்டத்தில் மத்திய அமைச்சர் மகனின் கார் மோதி 2 விவசாயிகள் உயிரிழந்தனர்.இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையால் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் பலியாகியுள்ளனர் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில்,லக்கிம்பூர் வன்முறையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்க காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியாங்கா காந்தி இன்று செல்வதாக திட்டமிடப்பட்டிருந்தது.
இதற்காக,இன்று அதிகாலை லக்னோவிலிருந்து லக்கிம்பூர் கிராமத்திற்கு செல்லும் வழியில் கைது செய்யப்பட்டதாக இளைஞர் பிரிவு தேசிய தலைவர் ஸ்ரீனிவாஸ் பிவி ட்வீட் செய்துள்ளார்.
आखिरकार वही हुआ, जिसकी BJP से उम्मीद थी
‘महात्मा गांधी’ के लोकतांत्रिक देश में ‘गोडसे’ के उपासकों ने भारी बारिश और पुलिसबल से संघर्ष करते हुए अन्नदाताओं से मिलने जा रही हमारी नेता @priyankagandhi जी को हरगांव से गिरफ्तार किया..
ये लड़ाई का सिर्फ आरंभ है!! किसान एकता जिंदाबाद pic.twitter.com/vehKIxh87B
— Srinivas BV (@srinivasiyc) October 4, 2021