அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை ஏந்தியபடி எம்பியாக பதவியேற்றார் பிரியங்கா காந்தி!

வயநாடு மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற பிரியங்கா காந்தி தற்போது எம்.பி.யாக பதவியேற்று கொண்டார்.

Priyanka Gandhi Take Oath

டெல்லி : அண்மையில் வயநாடு மக்களவைத் தொகுதிக்கான இடைதேர்தலானது நடைபெற்றது. அதில், காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட பிரியங்கா காந்தி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தார். அவர், சுமார் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார்.

முன்னதாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அவர் ராஜினாமா செய்துகொண்டார். அதனைத் தொடர்ந்து, வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு சமீபத்தில் அந்த இடைத்தேர்தல் நடைபெற்றது.

இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரியங்கா காந்தி வேட்பாளராக முதல் அரசியல் களம் இறங்கினார். அதில், 6 லட்சத்திற்கும் மேல் வாக்குகள் வாங்கி அமோக வெற்றி பெற்ற அவர் இன்று மக்களவை உறுப்பினராக பிரியங்கா காந்தி பதவியேற்றுக் கொண்டார்.

மேலும், அவர் இன்று கேரள புடவை அணிந்து நாடாளுமன்றத்திற்கு வந்த நிலையில் கையில் அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை ஏந்தியபடி வயநாடு எம்.பியாக பொறுப்பேற்றுக் கொண்டார். பிரியங்கா காந்திக்கு மக்களவை சபாநாயகரான ஓம் பிர்லா பதவிபிரமாணம் செய்து வைத்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்