டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்க உள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்தாரஸ் என்ற கிராமத்தில் 19 வயது இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு , மிக கொடூரமான முறையில் தாக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். உயிரிழந்த பெண்ணின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் போலீசாரே தகனம் செய்ததால் சர்ச்சை எழுந்தது.இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பெண்ணின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற நேற்று காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் சென்ற நிலையில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள்.இதன் பின்னர் ராகுல் மற்றும் பிரியங்கா இருவரையும் போலீசார் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி, ஹத்தாரஸ் ஏற்பட்டுள்ள நிகழ்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.இந்த போராட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்க உள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் டெல்லி காங்கிரஸ் இன்று மாலை 4 மணிக்கு பஞ்ச்குயன் சாலையில் பிராத்தனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .
சென்னை: ஸ்டாண்ட் அப் காமெடி என்கிற பெயரில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து அவதூறாக பேசிய பரத் பாலாஜி…
சென்னை: சென்னையில் 2025-ஐ வரவேற்க தயாரான மெரினா கடற்கரை முழுவதும் பொதுமக்கள் குவிந்துள்ளனர். மெரினா கடற்கரை மணிக்கூண்டு பூக்கள், வண்ண…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து சென்னையில் போராட்டம் நடத்த முயன்ற நாம் தமிழர் தலைமை…
மணிப்பூர்: மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் வன்முறை நடந்து வருகிறது. இதில் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு ஆயிரக்கணக்கானோர்…
சென்னை: ஸ்டாண்ட் அப் காமெடி (STANDUP COMEDY) என்கிற பெயரில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து அவதூறாக பேசிய பரத்…
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் இன்று இரவு கடற்கரை சாலையில் நடைபெற உள்ள புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு ஏராளமான சுற்றுலாப் பயணிகள்…