உ .பி மாநிலத்தின் பொறுப்பாளராக பிரியங்கா காந்தி நியமனம் !
சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலில் உத்திரபிரதேச கிழக்கு பகுதியின் காங்கிரஸ் பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டார்.இவரின் வரவு உத்திர பிரதேசத்தில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு பலத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.உ .பி யில் உள்ள 80 தொகுதியில் ரே பரேலி தொகுதியில் மட்டும் சோனியா காந்தி வெற்றி பெற்றார். இதனால் பிரியங்கா காந்தியின் வரவு உ .பி யில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.
மேலும் உ .பி யில் பிரியங்கா காந்தி சகோதரர் ராகுல் காந்தி அமேதி போட்டியிட்டு தோல்விடைந்தார்.இந்நிலையில் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையாக தற்போது உ .பி மாநிலம் முழுமைக்கும் பிரியங்கா காந்தி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
உ .பி மாநிலத்தின் மேற்கு பகுதி பொறுப்பாளராக ஜோதிராதித்ய சிந்தியா நியமிக்கப்பட்டு இருந்தார்.தற்போது உ .பி மாநிலம் முழுவதும் கட்சி விவகாரங்களை கவனிக்கும் பொறுப்பை பிரியங்கா காந்தியிடம் கொடுக்கப்பட்டு உள்ளது.