பாஜக தொண்டர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட பிரியங்கா காந்தி..!

உத்தர பிரதேச தேர்தல் பரப்புரையின் போது பாஜக தொண்டர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறும் நிலையில் முதற்கட்டமாக 58 தொகுதிகளுக்கும், 2 வது கட்டமாக 55 தொகுதிகளுக்கும் , 3 ஆம் கட்டமாக 16 மாவட்டங்களில் உள்ள 59 தொகுதிகளில் ஏற்கனவே வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான 4 ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் தலைவர்களுக்கு இடையே வார்த்தைப் போர் நடந்து வரும் நிலையில், மறுபுறம் பிரியங்கா காந்தியைப் பற்றி சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது.
இந்த வீடியோவில் பிரியங்கா காந்தி பாரதிய ஜனதா கட்சியினருடன் கைகுலுக்கி செல்ஃபி எடுப்பதைக் காணலாம். இதுமட்டுமின்றி, பாஜக தொண்டர்களுக்கு காங்கிரஸ் தேர்தல் அறிக்கையையும் பிரியங்கா வழங்கினார். பாஜக தொண்டர்களுக்கும் பலர் பிரியங்கா காந்தியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பாஜக ஆதரவாளர்கள் பிரியங்கா காந்தியுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நேற்று உத்தரப்பிரதேசத்தில் நடந்த பேரணியில் பங்கேற்றுவிட்டு பாஜகவினரும் திரும்பிக் கொண்டிருந்தனர். அதே சமயம் சாலையில் பிரியங்கா காந்தியின் தனது சென்றுள்ளார். அப்போது தான் இந்த நிகழ்ச்சி நடந்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!
February 27, 2025
சினிமாவில் நடிச்சி சொத்து சேத்து வச்சிட்டு அரசியல் வராங்க! சிக தலைவர் திருமாவளவன் பேச்சு!
February 27, 2025
காலத்தால் அழியாத காதல் …15 ஆண்டுகளை கடந்த VTV…நடிகர் சிம்பு நெகிழ்ச்சி!
February 27, 2025