போலீஸ் தடியடியில் இருந்து தொண்டரைக் காப்பாற்றும் பிரியங்கா காந்தியின் வீடியோ, தற்பொழுது வைரலாகி வருகிறது.
உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற, கடந்த இரண்டு நாள்கள் முன் ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி சென்றனர். அங்கு 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு வந்த ராகுல்காந்தியை போலீசார் வழிமறைத்தனர்.
ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி, விதிகளை மீறியதாக அவர்களை போலீசார் கைது செய்து, பின்னர் விடுதலை செய்தனர். இந்நிலையில், ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உயிரிழந்த அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றனர். அவர்களை டெல்லி-நொய்டா சாலையில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.
மேலும், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தை சந்திக்க 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாக கூறினார்கள். இதனால் அந்த பெண்ணின் வீட்டிற்கு ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி சென்றனர்.
இதற்கு முன், நொய்டா சாலைக்கு வந்த அவர்களை போலீசார் வழிமறைத்தனர். மேலும் அங்கு நூற்றுக்கணக்கான தொண்டர்கள் குவிந்ததால், அவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினார்கள். இதனை கவனித்த பிரியங்கா காந்தி, பாதுகாப்பு வளையத்தையும் தாண்டி தொண்டர்களை போலீஸ் தடியடியில் இருந்து காப்பாற்றினார். இதுகுறித்த வீடியோ பதிவு, சமூக வலைத்தளத்தில் அதிகளவில் பரவிவருகிறது.
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…