காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஏப்ரல் 25-26 ஆகிய தேதிகளில் கர்நாடகாவில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல், வரும் மே 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 13-ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து. தேர்தல் இன்னும் சில நாட்களில் தொடங்கப்படவுள்ளதால் தேர்தல் பிரச்சாரத்தில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.
பாஜக ஆட்சியில் இருக்கும் ஒரே தென் மாநிலமான கர்நாடகாவில், தேர்தலுக்கு முன்னதாக வெற்றி பெறும் அதன் அனைத்து முயற்சிகளையும் அக்கட்சி எடுத்துவருகிறது. இந்த நிலையில், தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வரும் ஏப்ரல் 25-26 ஆகிய தேதிகளில் கர்நாடகாவில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். இந்த இரண்டு நாட்களில் அவர் கர்நாடகாவிற்கு செல்லவுள்ளார்.
25-ஆம் தேதி பிரயங்கா காந்தி கர்நாடகாவில் உள்ள தி.நரசிபுரத்தில் உள்ள கெலவரகண்டியில் மதியம் 1 மணி வரை நடைபெறும் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். அதன்பிறகு, 3 மணி முதல் சாமராஜநகர் மாவட்டம் ஹனூரில் உள்ள கௌரிசங்கர் கன்வென்ஷன் ஹாலில் மகளிர் மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.
மேலும், கர்நாடக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வரும் ஏப்ரல் 29ஆம் தேதி பிரதமர் மோடி கர்நாடகவிற்கு வருகை தரும் நிலையில், அவருடைய தலைமையில் மெகா தேர்தல் பிரச்சாரத்திற்கு பாஜக தயாராகிறது என்பது குறிப்பிடதக்கது.
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட…
சென்னை : இந்த வருடத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இந்த வாரம் திங்கள் அன்று தொடங்கி இன்றுடன் நிறைவு பெற்றது.…
துபாய் : நடிகர் அஜித்குமார் சினிமாவை தாண்டி ரேஸிங்கில் அதீத ஆர்வம் கொண்டவர். 2000த்தின் தொடக்கத்தில் ரேஸிங்கில் கலந்து கொண்ட…
குஜராத் : நேற்று (ஜனவரி 10) குஜராத் மாநிலம் அகமதாபாத் தனியார் பள்ளியில் எடுக்கப்பட்ட ஒரு சிசிடிவி காட்சிகள் காண்போரை…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
சென்னை : கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம் என…