பிரியங்கா காந்தி அழகாக இருக்கின்றார்……பாஜக அமைச்சர் சர்சை பேச்சு…..!!
பிரியங்கா காந்தி மிகவும் அழகாக இருப்பது, காங்கிரஸிற்கு வாக்குகளை சேர்க்காது என, பீகார் மாநில அமைச்சர் வினோத் நாராயண் ஜா, சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு வருகின்ற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலை முன்னெடுக்கும் பணியில் அனைத்து கட்சிகளும் இறங்கியுள்ள.குறிப்பாக மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சிக்கெதிராக வலுவான கூட்டணி அமைக்க வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி பொது செயலாளராக அறிவிக்கப்பட்டார் .
இது குறித்து பாரதீய ஜனதா கட்சியின் பீகார் மாநில பாஜக அமைச்சர் வினோத் நாராயண் ஜா தெரிவிக்கையில் , பிரியங்கா காந்தி மிகவும் அழகானவர் அவரால் அரசியலில் சாதிக்கமுடியாது என்றும் விமர்சனம் செய்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் பிரியங்கா காந்தியின் அழகான முகத்திற்காக காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.இவரின் இந்த கருத்து சர்சையை ஏற்படுத்தியுள்ளது.