கடந்த ஆண்டு நவம்பர் மாதம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு எஸ்பிஜி பாதுகாப்பு நீக்கப்பட்டு, சிஆர்பிஎப் இசட் பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியது.
இசட் பிளஸ் பாதுகாப்பாக வழங்கப்பட்டவர்களுக்கு அரசு சார்பில் வீடு வழங்குவதற்கு சட்டத்தில் இடமில்லை. இதனால், டெல்லி லோதி எஸ்டேட்டில் உள்ள இல்லத்தை பிரியங்கா காந்தி ஆகஸ்ட் 1-ம் தேதிக்குள் காலி செய்ய வேண்டும். இல்லையென்றால், அபராதம், வாடகை வசூலிக்கப்படும் என கூறப்பட்டது.
ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்குள் பிரியங்கா காந்தி தான் தங்கியிருக்கும் வீட்டை காலி செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டார். பிரியங்கா காந்தி தங்கியிருந்த வீடு, அவருக்குப்பின் பாஜக எம்.பி அனில் பலூனிக்கு மத்திய வீட்டுவசதித்துறை ஒதுக்கி உள்ளது.
இந்நிலையில், தான் தங்கியிருந்த வீட்டுக்கு புதிதாக குடியேற இருக்கும் பாஜக எம்.பி அனில் பலூனிக்கு தேநீர் விருந்தளிக்க பிரியங்கா காந்தி அவரின் அலுவலகத்துக்கும் தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகின.
இதற்கு பதில் அளித்து கடிதம் அனுப்பி உள்ள எம்.பி அனில் பலூனி, சமீபத்தில் தான் புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கப்பட்டு பின்னர் வீடு திரும்பியதால் வெளியே செல்ல முடியாது என கூறினார். வீட்டில் தனிமையில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார். லோதி பங்களாவிற்குள் நுழைந்தவுடன் இரவு விருந்துதிற்கு அழைப்பு விடுப்பதாக கூறி உள்ளார் என கூறப்படுகிறது.
உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி. கடந்த ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, மும்பையில் பல மாதங்களாக சிகிச்சை பெற்றார். பாஜகவின் தேசிய ஊடக பொறுப்பாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான பலூனி, இங்குள்ள குருத்வாரா ராகப்கஞ்ச் சாலையில் உள்ள அரசு பங்களாவில் தங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…