கர்நாடகாவில் ரூ.1.5 லட்சம் கோடியை கொள்ளையடித்த பாஜக.! பிரியங்கா காந்தி பகிரங்க குற்றசாட்டு.!
கர்நாடகாவில் கடந்த ஆட்சி காலத்தில் ரூ.1.5 லட்சம் கோடியை பாஜக அரசு கொள்ளையடித்தது என பிரியங்கா காந்தி குற்றசாட்டை முன்வைத்துள்ளார்.
கர்நாடக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் காரணத்தால் அரசியல் தலைவர்களின் பிரச்சாரங்களும் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. தங்கள் கட்சிக்கு ஆதரவாக பேசி வாக்கு சேகரிக்கும் அதே வேளையில் மற்ற கட்சியினர் மீது குற்றசாட்டுகளையும் முன்வைத்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.
விஜயபுரா பகுதியில் நேற்று வாக்கு சேகரித்த காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி பிரச்சாரம் செய்கையில் பாஜக மீது பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்தார். அவர் கூறுகையில், கடந்த மூன்றரை ஆண்டுகளில் கர்நாடகாவில் பாஜக ஆட்சி செய்கையில் சுமார் 1.5 லட்ச கோடி ரூபாய் கொள்ளையடித்ததாக குற்றம் சாட்டினார்.
மேலும் அவர் கூறுகையில், அவர்கள் கொள்ளையடித்த பணத்தில், 100 எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டி முடித்து இருக்கலாம். 30,000 ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் 30 லட்சம் ஏழைகளுக்கு வீடுகளை கட்டி கொடுத்து இருக்கலாம் எனவும் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டினார். கர்நாடகாவின் வளர்ச்சிக்கு தொடர்பில்லாத பிரச்சினைகளை தான் தற்போது பாஜக எழுப்புகிறது என்றும் தேர்தல் பிரச்சாரத்தில் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டினார்.