மாணவர்கள் மீது தாக்குதல் – இந்தியா கேட் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பிரியங்கா காந்தி
- டெல்லியில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் ஜாமியா பலகலைகழக மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தினார்கள்.
- தாக்குதலை கண்டித்தும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியதற்கு நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டம் வெடித்துள்ளது.குறிப்பாக டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள்.இந்த தடியடி தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல மாநிலங்களில் இன்று மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.அரசியல் கட்சியினரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லியில் இந்தியா கேட் முன்பு குடியுரிமை சட்டத்துக்கு எதிராகவும் ,ஜாமியா பலகலைகழக மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலை கண்டித்தும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியினரும் கலந்து கொண்டுள்ளனர்.