பிரியங்காவை எரித்து கொன்ற கொடூரனுக்கு உடலில் இப்படி ஒரு பிரச்சனையா..?!
சமீபத்தில் பிரியங்கா ரெட்டி கொலை சம்பவம் நாட்டையே உலுக்கியது. ஹைதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டியை மருத்துவ மனையில் இருந்து வீடு திரும்பிய போது லாரி ஓட்டுநர் மற்றும் க்ளீனர் என நான்கு பேர் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொலை செய்தனர்.
பிரியங்காவை கொலை செய்த வழக்கில் முகமது பாஷா, நவீன், சின்ன கேசவலு மற்றும் ஷிவா ஆகிய நான்கு பேரை போலீசாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட கேசவலு சிறை அதிகாரிகளிடம் ஒரு கோரிக்கை வைத்து உள்ளான்.
அதாவது அதிகமான மதுப்பழக்கம் கொண்ட கேசவலுக்கு ஒரு சிறுநீரகம் பாதிக்கப் பட்டுள்ளது.இதற்காக கேசவலு நிம்ஸ் மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்ததாகவும், அந்த சிகிச்சையை சிறையிலும் தொடர வேண்டும் என கோரிக்கையை வந்தார்.
இது குறித்து சிறை அதிகாரி ஒருவர் கூறுகையில் , கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் சந்திக்க இதுவரை யாரும் வரவில்லை.கேசவலு ஒரு வருடமாகவே சிறுநீரக பிரச்சனைக்கு சிகிச்சை வந்ததாகவும் , கேசவலு கனமான பொருள்களைத் தூக்கக் கூடாது என மருத்துவர்கள் கூறியதாக அவர் கூறினார்.
கேசவலு தாய் நேற்று முன் தினம் என் மகன் தவறு செய்திருந்தால் அவனையும் பிரியங்கா போல எரித்துவிடுங்கள் என கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.