இந்தியாவில் தனியார் ரயில் சேவை வருகின்ற 2023-ஆம் மார்ச் மாதம் முதல் செயல்பாட்டுக்கு வரும் என மத்திய ரயில்வே துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் விடும் பணி அடுத்தாண்டு மார்ச் மாதம் நிறைவடைந்து விடும் என கூறப்பட்டுள்ளது.
சமீபத்தில் ரயில்வே துறை தனியார் வசமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த செய்தி, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்குப் பலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். ரயில்வே துறை தனியார் வசம் சென்றால் வேலை வாய்ப்பு இழக்கப்படும் , ரயில் கட்டணம் உயரும் என பல கருத்துகள் முன் வைக்கப்படுகின்றன.
ரயில்வே வாரியத் தலைவர் வி.கே. யாதவ் இது குறித்து கூறுகையில், ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதால் யாருக்கும் வேலைவாய்ப்பு பறிபோகாது. புதிய தொழில்நுடப்ங்கள் அமல்படுத்தப்படும். இதனால், புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என கூறினார். ரயில்வே துறையில் சில வழித்தடங்களில் மட்டுமே தற்போது தனியார் மயமாக்கப்பட்டுள்ளது என கூறினார்.
டெல்லி : இன்று மறைந்த முன்னாள் இந்திய பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாள்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து பேசுகையில், அம்பேத்கர் குறித்து…
குஜராத்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 ஒருநாள் போட்டிகள்…
பிரான்ஸ்: பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு இடையில் லிஃப்ட் தண்டுகளில் தீ விபத்து ஏற்பட்டது.…
சென்னை: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…
தூத்துக்குடி: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…