அடுத்தாண்டு டெண்டர் .. 2023 மார்ச் மாதம் முதல் தனியார் ரயில் சேவை .! மத்திய ரயில்வே.!

Default Image

இந்தியாவில் தனியார் ரயில் சேவை வருகின்ற 2023-ஆம்  மார்ச் மாதம் முதல் செயல்பாட்டுக்கு வரும் என மத்திய ரயில்வே துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் விடும் பணி அடுத்தாண்டு மார்ச் மாதம் நிறைவடைந்து விடும் என கூறப்பட்டுள்ளது.

சமீபத்தில் ரயில்வே துறை தனியார் வசமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த செய்தி, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்குப் பலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். ரயில்வே துறை தனியார் வசம் சென்றால் வேலை வாய்ப்பு இழக்கப்படும் , ரயில் கட்டணம் உயரும்  என பல கருத்துகள் முன் வைக்கப்படுகின்றன.

ரயில்வே வாரியத் தலைவர் வி.கே. யாதவ் இது குறித்து கூறுகையில், ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதால் யாருக்கும் வேலைவாய்ப்பு பறிபோகாது. புதிய தொழில்நுடப்ங்கள் அமல்படுத்தப்படும். இதனால், புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்  என கூறினார். ரயில்வே துறையில் சில வழித்தடங்களில் மட்டுமே தற்போது தனியார் மயமாக்கப்பட்டுள்ளது என கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்