கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கும் தனியார் பள்ளிகள்!
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளிகள் கொரோனாவால் பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு இலவச கல்வி வழங்க முடிவு செய்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. தினமும் லட்சக்கணக்கானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படும் நிலையில், பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். இந்நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் மற்றும் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பல மாநிலத்திலும் உள்ள அரசுகள் இலவச கல்வி உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன.
தற்பொழுதும் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட தனியார் பள்ளிகள் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. உத்தரபிரதேச துணை முதல்வர் தினேஷ் ஷர்மாவுடன் தனியார் பள்ளிகள் நடத்திய கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த குழந்தையிடமிருந்து ஒரு பைசா கூட கட்டணமாக பெறப்படாது எனவும் கூறப்பட்டுள்ளதுடன், பாட புத்தகம், நோட்டு, சீருடை ஆகியவை கூட இலவசமாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.