BREAKING: பொதுத்துறை நிறுவனங்களிலும் தனியார் பங்களிப்புக்கு அனுமதி.!
ஒரே துறையில் 4-க்கும் மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் இருந்தால் ஒன்றிணைக்கப்படும் என மத்திய நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்பை சமாளிக்க பொத்துறை நிறுவனங்களுக்காக புதிய கொள்கைகள் வகுக்கப்படும். அனைத்து துறைகளிலும் தனியாரின் பங்களிப்புக்கு வழிவகை செய்யப்படும். குறிப்பிட்ட சில துறைகளிலும் தனியார் பங்களிப்புடன் குறைந்தது ஒரு பொதுத்துறை நிறுவனத்தின் பங்கீடும் இருக்கும்.
ஒரே துறையில் 4-க்கும் மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் இருந்தால் ஒன்றிணைக்கப்படும் என்றும் தனியார் முதலீடு தொடர்பான விரிவான கொள்கைகள் விரைவில் அறிவிக்கப்படும். பாதுகாப்பு போன்ற தேவைப்படும் துறைகளில் மட்டுமே பொதுத்துறை நிறுவனங்கள் இருக்கும் என மத்திய நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.