கொரோனா வைரஸ் காரணமாக தற்போது தனியார் மருத்துவ மனைகள் கொரோனா சிகிச்சை வழங்க மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா சிகிச்சை தொடர்பான உரிய நெறிமுறைகள், சிகிச்சைக்கான அதிகபட்ச கட்டணம் நிர்ணயித்து அந்தந்த மாநில அரசுகள் அறிவித்துள்ளது.
இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள விரின்ச்சி என்ற தனியார் மருத்துவமனையில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்ததை தொடர்ந்து நேற்று முன்தினம் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான அரசாங்க அனுமதியை விரின்ச்சி என்ற தனியார் மருத்துவமனை இழந்தது. ஹைதராபாத்தில் அனுமதியை இழந்த இது இரண்டாவது தனியார் மருத்துவமனையாகும்.
இதற்கு முன் டெக்கான் மருத்துவமனை என்ற மருத்துவமனை இதேபோன்ற புகார்களுக்காக கடந்த திங்களன்று கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான அனுமதியை இழந்தது. கொரோனா நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களின் மூலம் அதிக புகார்கள் வந்தால் தனியார் மருத்துவமனைகள் இதேபோன்ற நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…