இந்தியா முழுவதும் தனியார் மருத்துவமனை டாக்டர்கள் இன்று வேலைநிறுத்தம்!
இந்திய மருத்துவ கவுன்சிலைக் கலைக்கும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் தனியார் மருத்துவர்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்காக மத்திய அரசு கொண்டு வர உள்ள மசோதா, நவீன சிகிச்சை முறைகளை 6 மாத பயிற்சிக்குப் பின் ஆங்கில மருத்துவர்கள் மட்டுமன்றி அனைத்து வழிமுறை மருத்துவர்களும் மேற்கொள்ள வழிவகுப்பதாக இந்திய மருத்துவர் சங்கத்தின் தமிழக கிளை தெரிவித்துள்ளது. தேசிய மருத்துவ ஆணையத்தில் மருத்துவத் துறை சாராதவர்களையும் நியமிக்க வகை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.இந்த வேலை நிறுத்தத்தில் அவசர சிகிச்சை, பிரசவம் மற்றும் உள்நோயாளிகள் சிகிச்சை ஆகியவை வழக்கம்போல நடைபெறும் என்றும் கூறியுள்ளது.
எனவே, அகில இந்திய அளவில் இன்று மாலை 6 மணி வரை மருத்துவர்கள் பணிகளை புறக்கணிக்கப் போவதாக தெரிவித்துள்ளது.
source: dinasuvadu.com