தனியார் நிறுவனங்களும் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ராக்கெட்டுகளை ஏவலாம் – இஸ்ரோ தலைவர்!

தனியார் நிறுவனங்கள் அனைத்தும் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து தங்களுடைய ராக்கெட்டுகளை ஏவலாம் என இஸ்ரோ அமைப்பின் தலைவர் சிவன் அவர்கள் கூறியுள்ளார்.
விண்வெளித் துறையில் தனியார் துறையையும் அனுமதிக்க மத்திய அரசு அண்மையில் ஒப்புதல் அளித்தது. தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அளித்துள்ள ஒப்புதலை இஸ்ரோ அமைப்பின் தலைவர் சிவன் அவர்களும் ஒரு முறை கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்பொழுது இஸ்ரோ அமைப்பின் தலைவர் சிவன் கூறியிருப்பதாவது, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து தனியார் நிறுவனங்கள் தங்களுடைய ராக்கெட்டுகளையும் இனி விண்ணில் செலுத்தலாம் எனவும், இதற்கான தொழில்நுட்ப உதவிகளை இஸ்ரோ சார்பில் தருகிறோம் எனவும் அவர் கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து! 3 பேர் உயிரிழப்பு!
April 26, 2025
திறந்தவெளி வாகனத்தில் விஜய்., ஸ்தம்பித்த கோவை விமான நிலையம்!
April 26, 2025