தனியார் ஆம்புலன்ஸ் சேவைக்கான கட்டணம் நிர்ணயம் – டெல்லி அரசு உத்தரவு!
கொரோனா நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் டெல்லி தனியார் ஆம்புலன்ஸ் சேவைகள் அதிகபட்ச கட்டணம் வசூலிக்கும் நிலையில், இந்த ஆம்புலன்ஸ் சேவைகளுக்கான கட்டணத்தை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் நிர்ணயித்து உத்தரவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் ஒருவருக்கொருவர் உதவி மனிதநேயத்துடன் நடந்து கொண்டால் மட்டுமே கொரோனாவை ஒழிக்க முடியும். இந்நிலையில், தனியார் சேவைகள் பல மக்களுக்கு ஒரு புறம் உதவுகிறது, ஆனால், மறுபுறம் சுரண்டுகிறது. இந்நிலையில், டெல்லியில் உள்ள தனியார் ஆம்புலன்ஸ் சேவைகள் அதிகபட்சமாக கட்டணம் வசூலித்து வரும் நிலையில், இனி எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பது குறித்து டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதாவது தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு அதிகபட்சமாக 1,500 ரூபாயும், அடுத்த 10 கிலோ மட்டருக்கு பிறகு 1 கிலோமீட்டருக்கு 100 ரூபாய் வரையும் வசூலிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பி.எல்.எஸ் ஆம்புலன்ஸ் வைத்திருப்பவர்கள் முதல் 10 கிலோ மீட்டருக்கு அதிகபட்சம் 2 ஆயிரம் ரூபாயும், அடுத்த பத்து கிலோமீட்டருக்கு ஒரு கிலோமீட்டருக்கு 100 ரூபாய் வீதமும் வசூலிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏ.எல்.எஸ் ஆம்புலன்ஸ் வைத்திருப்பவர்கள் முதல் 10 கிலோ மீட்டருக்கு அதிகபட்சம் 4 ஆயிரம் ரூபாயும், அடுத்த பத்து கிலோமீட்டருக்கு ஒரு கிலோமீட்டருக்கு 100 ரூபாய் வசூலிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள், எந்த ஒரு தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் அல்லது உரிமையாளர்களும் இந்த விதிமுறைகளை மீறுவது தெரிந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அவர்களது ஓட்டுனர உரிமம் ரத்து செய்யப்பட்டு ஆம்புலன்சின் பதிவு சான்றிதழ் ஆகியவை பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.
It has come to our notice that private ambulance services in Delhi are charging illegitimately.
To avoid this practise, Delhi govt has capped maximum prices that private ambulance services can charge.
Strict actions will be taken against those who violate the order. pic.twitter.com/71fJChBGdo
— Arvind Kejriwal (@ArvindKejriwal) May 6, 2021