டெஸ்லா தனது இந்திய தொழிற்சாலைக்கு தனியார் 5ஜி நெட்ஒர்க் உருவாக்க ஜியோ பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் உலகின் முன்னனி எலக்ட்ரிக் கார் நிறுவனமான டெஸ்லாவுடன் இணைந்து, அந்நிறுவனம் இந்தியாவில் அமைக்கும் தொழிற்சாலைக்கு முதல் தனியார் 5ஜி நெட்ஒர்க் உருவாக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. பேச்சுவார்த்தைகள் இன்னும் ஆரம்ப கட்டத்தில் உள்ளன.
டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது உற்பத்தி ஆலையை அமைப்பது குறித்து ஆய்வு செய்து வரும் நிலையில், ரிலையன்ஸ் ஜியோ எலான் மஸ்க் தலைமையிலான நிறுவனத்துடன் இணைந்து, அதன் இந்திய தொழிற்சாலைக்கு தேவையான தனியார் நெட்ஒர்க்கை உருவாக்குவதற்கான வாய்ப்பைப் பற்றி ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இறுதிக்கட்ட பணிகள் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது தொழிற்சாலையை அமைக்கும் பணியை தொடங்கியவுடன் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றன. ஜியோ நெட்ஒர்க் டெஸ்லா நிறுவனத்திற்கு தேவையான அனைத்து முக்கியமான செயல்பாடுகளையும் அதிவேகமான டேட்டா வேகத்தில் நிர்வகிக்கும் வகையிலும், பொது நெட்ஒர்க்கில் இது சாத்தியமில்லாமல் போகலாம் எனவும் தெரிவித்துள்ளது.
டெல்லி : மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருந்த கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஷங்கர்…
சென்னை : நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…
சென்னை : நாம் தமிழா் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றை அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகளாக இந்திய…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…