100-வது பிறந்தநாளை கொண்டாடிய முப்படைகளில் பணியாற்றிய பிரிதிபால் சிங் .!

Default Image

இரண்டாம் உலகப் போர் உட்பட 1965 இந்தியா -பாகிஸ்தான் போரில் கலந்து கொண்ட மூத்த வீரரான ஓய்வு பெற்ற கர்னல் பிரீதிபால் சிங் கில் நேற்று தனது 100 வயதை எட்டினார். முப்படைகளும் பணியாற்றிய ஒரே நபர் பிரீதிபால் சிங், இவர்  தனது பிறந்தநாளை சண்டிகரில் உள்ள தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.

பிருத்விபால் சிங் கில் 1942 இல் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இந்திய ராயல் இந்தியன் விமானப்படையில் விமானியாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், பின்னர் கடற்படையில் சேர்ந்தார், இறுதியாக 1965 ஆம் ஆண்டு போரின்போது இந்திய ராணுவத்தில் குன்னார் அதிகாரியாக பணியாற்றினார். ஓய்வு பெறுவதற்கு முன்பு, மணிப்பூரில் ரைபிள்ஸ் துறை தளபதியாகவும் இருந்தார்.

கர்னல் பிருத்விபாலின் தந்தை ஹர்பால் சிங்கும் ராணுவத்தில் இருந்தார். அவர் ராணுவத்தில் கேப்டனாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்