கைதி பட பாணியில் கைவிலங்குடன் கொரோனா வார்டில் குற்றவாளிக்கு விருந்து!
கொரோனா வார்டில் கைவிலங்குடன் மது அருந்தும் குற்றவாளியின் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தன்பாத் எனுமிடத்தில் பொதுமக்களை மிரட்டி பணம் பறித்ததாக சாந்து குப்தா என்பவர் அண்மையில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சிறைக்குச் செல்வதற்கு முன்பாக அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டஅவருக்கு தொற்று இருப்பது உறுதியாகியது. இதனை அடுத்து தன்பாத்தில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பதாக சாந்து குப்தா கைவிலங்குடன் கொரோனா வார்டில் மது குடிப்பது போன்றும், வகைவகையான உணவு உண்பது போன்றும் கைதி படத்தில் வருவது போல கைவிலங்குடன் கலக்கல் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியது.
இந்த புகைப்படம் வைரலாகியதை தொடர்ந்து இவ்வளவு சகல வசதியுடன் அதுவும் கொரோனா வார்டில் மது கொடுத்து உணவு கொடுத்தது யார் என பலராலும் கேள்வி எழுப்பப்பட்டது. இது தொடர்பாக ஜார்கண்ட் முதல்வர் மாவட்ட நிர்வாகத்திடம் புகைப்படத்தின் உண்மை தன்மையை அறியுமாறு கேட்டுக் கொண்டிருந்தார். இதன்படி சாந்து குப்தாவின் புகைப்படம் உண்மை என நிரூபிக்கப்பட்டது. இது குறித்து தாற்பொழுது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.