உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைமை விஞ்ஞானி டாக்டர் செளமியா சுவாமிநாதன் பள்ளிகளை திறக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு அக்டோபரில் இருந்து சில மாநிலங்களில் படிப்படியாக பள்ளிகளை தொடங்கப்பட்ட போதிலும், தொற்றுநோயின் இரண்டாவது அலை காரணமாக, பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டன.
தொற்றுநோய் காரணமாக நீண்ட காலமாக மூடப்பட்ட பள்ளிகளைத் திறக்குமாறு வேண்டுகோள் விடுத்த சுவாமிநாதன் ட்விட்டரில் “குழந்தைகளின் மன, உடல் மற்றும் கற்றல் திறன்களில் நீண்டகால தாக்கம் இருக்கும். பள்ளிகளைத் திறப்பதற்கு முன்னுரிமை, சமூக விலகல், முகமூடி, கைகளை சுத்தமாக வைத்திருப்பது போன்ற நடவடிக்கைகளும் பின்பற்றப்பட வேண்டும். அனைத்து பெரியவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தவேண்டும் என பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில், ஆங்கில நாளிதழ் டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில், குழந்தைகளின் கல்வி பாதிக்காத வகையில் மாநிலங்கள் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் என்றும் சுவாமிநாதன் கூறியிருந்தார். வளர்ந்து வரும் முன்னுரிமைகளில் ஒன்று பள்ளிகளை எப்படி, எப்போது மீண்டும் திறப்பது என்பதுதான். ஏழை குழந்தைகள் நீண்ட நேரம் பள்ளிக்குச் செல்லாவிட்டால், விளைவு மோசமாக இருக்கும்.
அவர்கள் ஆன்லைன் கல்வி வசதியைப் பெற முடியாது, பள்ளிகள் திறக்கப்படாவிட்டால் அவர்களில் பலர் படிப்பைத் தொடர முடியாது என தெரிவித்தார்.
நாட்டின் 361 மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி, 48 சதவிகித பெற்றோர்கள் கொரோனா தடுப்பூசி பெறும் வரை தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப விரும்பவில்லை. கடந்த மாதம் ஆன்லைன் தளமான ‘லோக்கல் சர்க்கிள்ஸ்’ நடத்திய இந்த கணக்கெடுப்பில் 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பங்கேற்றனர். கணக்கெடுப்பில் பங்கேற்ற 32 சதவீத பெற்றோர்கள், தங்கள் மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று வழக்குகள் பூஜ்ஜியமாகக் குறைந்தால், தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில் எந்த தயக்கமும் இருக்காது என்று கூறியுள்ளனர்.
பெற்றோர்களின் கூற்றுப்படி, 48 சதவீத பெற்றோர் கொரோனாவுக்கு எதிராக தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுகிற வரையில் அவர்களை பள்ளிகளுக்கு அனுப்ப தயாராக இல்லை என தெரிவிக்கின்றனர். 21 சதவிகித பெற்றோர்கள் பள்ளிகளைத் திறக்கும்போது தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளனர்.
இந்த கணக்கெடுப்பு நாட்டின் நகர்ப்புற மாவட்டங்கள் முதல் கிராமப்புற மாவட்டங்கள் வரை பல கட்டங்களாக நடத்தப்பட்டது.
டெல்லி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு…
கோவை : ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை,…
சென்னை : விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் தலை சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த…
சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்கான செலவை…
சென்னை : மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15,…
டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில்…