கொரோனா நெருக்கடி காலத்தில் ஏழைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது – பிரதமர் மோடி
கொரோனா நெருக்கடி காலத்தில் ஏழைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மத்திய பிரதேச மாநிலத்தில் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனா திட்டம் பயனாளிகளிடம் உரையாடினார் . அப்போது பேசிய அவர், கொரோனா நெருக்கடியின் போது 80 கோடி இந்தியர்களுக்கு இலவச ரேஷன் வழங்கப்பட்டது. ஏழை குடும்பங்களுக்கு இலவச எரிவாயு சிலிண்டர்கள் கூட வழங்கப்பட்டன. கடந்த நூறு ஆண்டுகளில் மனித இனம் சந்தித்திராத பேரிடர் கொரோனா தொற்று என கூறினார்.
மேலும், மத்திய பிரதேசத்தில், பல மாவட்டங்கள் மழை மற்றும் வெள்ளத்தை எதிர்கொள்வது துரதிர்ஷ்டவசமானது. பலரின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இந்த நெருக்கடியான காலங்களில் மத்திய அரசோடு, முழு தேசமும் துணை நிற்கிறது என தெரிவித்தார்.
மேலும், முகக்கவசம் அணிந்தல், சானிடைசர் உபயோகப்படுத்துதல், தனிமனித இடைவெளியை கடை பிடித்தல் போன்றவை மக்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்றும், பிரதான் மந்திரிகரீப் கல்யாண் அன்ன யோஜனா, பிரதான் மந்திரி ரோஸ்கர் யோஜனா உள்ளிட்ட திட்டங்களில் ஏழை மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதாகவும், முதல் நாளிலிருந்தே ஏழை மக்களின் உணவு மற்றும் வேலை வாய்ப்புகளில் கவனம் செலுத்தபட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.