பிரதமரின் 20 லட்சம் கோடி நிதி – விவசாயிகளுக்கு எவ்வளவு? எதற்கு?

Default Image

கொரோனா நிவாரண நிதியாக பிரதமர் அளித்துள்ள 20 லட்சம் கோடி பணத்தில் விவசாயிகளுக்கு எவ்வளவு அளிக்கப்படும் மற்றும் எந்தெந்த விவசாய துறைகளுக்கு அளிக்கப்படும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.  

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தற்பொழுது வரை தனது கோர முகத்தை தான் காண்பித்து வருகிறது. இந்நிலையில், இந்த வைரஸால் பொருளாத சிக்கல் அதிகம் ஏற்பட்டுள்ளதால் பிரதமர் மோடி மக்களுக்கு நிவாரண நிதியாக 20 லட்சம் கோடி பணத்தை கொடுக்கவுள்ளதாக அறிவித்திருந்தார். 

அதன் படி இந்த பணம் யாருக்கெல்லாம் செல்லும் என மத்திய நிதி துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த தினங்களில் முதல் கட்ட மற்றும் இரண்டாம் கட்ட அறிவிப்பை வெளியிட்டார். 

இந்நிலையில், தற்பொழுது நேரலையில் அறிக்கை வெளியிடும் சீதாராமன் இன்று 11 துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் 8 விவசாய துறை சம்மந்தப்பட்டது தான். 

அதன் படி, சணல் மற்றும் பருப்பு உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாகவும், சவாலான சூழலில் பணியாற்றும் பலர் விவசாய துறையை சார்ந்தே உள்ளதாகவும் கூறியுள்ளார். 

மேலும், 2 மாதங்களில் ரூ.74,300 கோடிக்கு உணவு தானியங்கள் மற்றும் 560 லட்சம் லிட்டர் பால் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் விளைவிக்கப்படும் மரவள்ளி கிழங்கு சர்வதேச நிலையை அடைய உதவுள்ளதாகவும் கூறியுள்ளார். 

இதன் படி, வேளாண் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ.1 லட்சம் கோடியும், குறு உணவு நிறுவனங்களை உருவாக்குவதற்காக ரூ.10 ஆயிரம் கோடியும், விவசாயப் பொருள்கள் சர்வதேச அளவில் விளம்பரப்படுத்த ரூ.10 ஆயிரம் கோடியும் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், ஊரடங்கு காலத்தில் பீமயோஜனா திட்டத்தில் விவசாயிகளுக்கு 6,400 கோடி நிலுவை தொகையும், பிரதமரின் கிஷான் திட்டத்தில் ரூ.18,700 கோடியும் விவசாயிகளது வாங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். 

ஒரு இடத்தின் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை கண்டறிந்து, அவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்