பிரதமர் நிவாரண நிதி ! ரயில்வே பணியாளர்கள் ரூ.151 கோடி நிதியுதவி- மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
கொரோனா வைரஸ் உலக நாடுகளை முழுவதும் மிரட்டி வருகிறது.இந்தியாவில் தற்போது இந்த வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது.இந்த வைரசால் இந்தியாவில் இதுவரை 1000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் மோடி 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்.இதனால் பல்வேறு தொழில் முடங்கியுள்ளது.பல அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்களின் தொழிலை நடத்த முடியாத நிலையில் உள்ளனர்.எனவே பிரதமர் மோடி கொரோனா தடுப்பு பணிக்கு தங்களால் இயன்ற நிதியுதவி அளியுங்கள் என பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.வேண்டுகோளை ஏற்று பலரும் நிதி உதவி அளித்து வருகின்றனர்
Following PM @NarendraModi ji’s call, I, & MoS Suresh Angadi will donate 1 month’s salary & 13 lakh railway & PSU employees will donate 1 day’s salary, equal to ₹151 cr, to PM-CARES fund
My grateful thanks to my colleagues & we all pray that our country remains safe and healthy
— Piyush Goyal (@PiyushGoyal) March 29, 2020
.
இந்நிலையில் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ்கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில்,பிரதமரின் கொரோன நிவாரண நிதிக்கு நானும் , ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அனகாடியும் ஒரு மாத ஊதியத்தை வழங்குகிறேன் .மேலும் ரயில்வே மற்றும் அதனை சார்ந்த நிறுவன ஊழியர்கள் தங்கள் ஒருநாள் ஊதியமான ரூ.151 கோடியை வழங்க உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.