களைகட்டும் மோடி 3.0 விழா.! அண்டை நாட்டு பிரதமர்கள் வருகை…

டெல்லி: மக்களவை தேர்தல் நிறைவடைந்து பாஜக தலைமையிலான NDA கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியமைக்க உள்ளது. கடந்த 2 முறைகளை போல அல்லாமல் இந்த முறை மத்தியில் கூட்டணி ஆட்சி நடைபெற உள்ளது. நேற்று அதற்கான பேச்சுவார்த்தைகள் டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் நிறைவுபெற்றன.
இதனை தொடர்ந்து கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க உரிமை கோரி நாளை மறுநாள் (ஜூன் 8) பதவி ஏற்பு விழாவை நடத்த பாஜக தலைமை திட்டமிட்டு வருகிறது. இதற்காக மற்ற நாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.
அண்டை நாடான, நேபாள பிரதமர் புஷ்பா கமல் தஹால் பிரதமர் மோடி 3வது முறை பிரதமராகும் நிகழ்வில் கலந்துகொள்ள நாளையே டெல்லி வருகிறார். அதே போல, வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் இந்த விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!
April 25, 2025
வீட்டுக்கு 200 ரூபாயில் ‘ஹை ஸ்பீடு’ இன்டர்நெட்! அமைச்சர் பி.டி.ஆர் அசத்தல் அறிவிப்பு!
April 25, 2025
“காஷ்மீர் எனக்கு 2 சகோதரர்களை கொடுத்துள்ளது” தாக்குதலில் தந்தையை இழந்த பெண் உருக்கம்.!
April 25, 2025