தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் இன்று அயோத்தி பயணம்…!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் இன்று அயோத்தி பயணம் மேற்கொள்கிறார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று அயோத்தி செல்கிறார். அயோத்தியில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு பிரம்மாண்டமான தீபோற்சவம் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு 15 லட்சத்துக்கு அதிகமான தீபங்களை ஏற்றுவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்வினை பிரதமர் இன்று மாலை தொடங்கி வைக்கிறார். பின்னர் நதிக்கரையில் ஆரத்தி வழிபாட்டிலும் ஈடுபட உள்ளார். அயோத்தி தீபோற்சவ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அவர்கள் முதல்முறையாக கலந்து கொள்ளும் நிலையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து அவர் ராமர் கோவில் கட்டுமான பணிகளையும் ஆய்வு செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.