இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) இடையேயான உறவுகள் தொடர்ந்து வலுவடைந்து வருகின்றன. இதற்கிடையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யான் இன்று (ஜனவரி 9) அகமதாபாத் விமான நிலையத்தை அடைந்தார். அவரை விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ‘ குஜராத் உலகளாவிய உச்சி மாநாட்டில்’ பங்கேற்க வந்துள்ளார்.
முகமது பின் சயீதுக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து இரு தலைவர்களும் சாலை மார்க்கமாக காரில் சென்றனர். சாலையோரம் இரு தலைவர்களும் கைகளில் கொடி ஏந்தியபடி ஏராளமான மக்கள் வரவேற்றனர். இரு தலைவர்களையும் வரவேற்க கோஷங்களும் எழுப்பப்பட்டன.
துடிப்பான குஜராத் என்ற தலைப்பிலான 10-வது உலகளாவிய உச்சி மாநாடு நாளை தொடங்கி 12-ம் தேதி வரை காந்திநகரில் நடைபெறுகிறது. இந்த ஆண்டு உச்சிமாநாட்டில் 34 கூட்டணி நாடுகளும், 16 அமைப்புகளும் பங்கேற்க உள்ளன. குஜராத் உலகளாவிய உச்சி மாநாட்டில் பங்கேற்க பல நாடுகளின் பெரிய தலைவர்கள் இந்தியா வந்துள்ளனர்.
சென்னை : நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி வரும் 2026 சட்டமன்ற தேர்தலில்…
சென்னை : இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த திருமால்பூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள்…
மும்பை : ஆஸ்ரேலியாவுக்கு எதிராக நடந்து முடிந்த பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் இந்திய அணி தோல்வியடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில்…
துபாய் : நடிகர் அஜித் சினிமாத்துறையில் நடிப்பதில் மட்டும் ஆர்வம் செலுத்தாமல் அதற்கு அடுத்தபடியாக கார் பந்தயங்களில் கலந்துகொன்டு விளையாடுவதில் ஆர்வம்…
சென்னை : 12 வருடங்களுக்கு பிறகு சுந்தர் சி இயக்கத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான மத கஜ ராஜா திரைப்படம்…
ஆந்திரா : பொறுத்தார் பூமி ஆள்வார் என்ற பழமொழிக்கு ஏற்றபடி கடைசி வரை பொறுமையாக களத்திற்குள் நின்று சேவல் ஒன்று…