உலகை அச்சுறுத்தும் கொரோனாவை கட்டுப்படுத்த இந்திய நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை நேற்று மாலை பிரதமர் மோடி அறிவித்தார். இந்த உத்தரவு நேற்று நள்ளிரவு 12 மணி முதல் வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி வரை நீட்டிக்கும் எனவும் அறிவித்தார்.
இதனை தொடர்ந்து இன்று பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி மக்களிடையே காணொளி மூலம் கலந்துரையாடினார்.
அப்போது, ‘ இந்த இக்கட்டான சூழ்நிலையில் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியம் எனவும், இந்த 21 நாட்கள் வீட்டிலிருந்து கொண்டு கொரோனா வைரஸை இந்தியாவில் இருந்து விரட்டுவோம். ‘ எனவும் குறிப்பிட்டார்.
மேலும், ‘ காபூலில் குருத்வாராவில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு வருத்தப்படுவதாகவும், இறந்த அனைவரின் குடும்பங்களுக்கு தனது இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும் பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியின் குடிமக்களுடன் காணொளி மூலம் உரையாற்றுகையில் தெரிவித்துள்ளார்.
பெர்த் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. இந்த…
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் அண்ணாமலையின் பேச்சால் எமோஷனல் ஆகும் மீனா.. ரோகிணியின் புதிய திட்டம்.. உதவி…
சென்னை : தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளிலும் அதை ஒட்டிய கிழக்கு பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடலின் மத்திய…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அடுத்து எப்போது தொடங்கும் என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இன்று சென்னை தலைமை…
டெல்லி : நாடாளுமன்ற மக்களவை குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளே மாநில அவையும், மக்களைவையும் நாள் முழுவதும் ஒத்தி…