விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் கீழ் 15-ஆவது தவணை தொகையை பிரதமர் நரேந்திர மோடி இன்று விடுவிக்கிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்கும் ‘பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தை’ பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், கடனைக் குறைக்கவும் மற்றும் விவசாய முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் இத்திட்டம் தொடங்கப்பட்டது.
அதன்படி, பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தில் ஆண்டுக்கு 3 தவணைகளில் தலா ரூ.2,000 என மொத்தம் ரூ.6,000 விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படும். இத்திட்டத்தில் இதுவரை 14 தவணைகள் மூலம் தகுதிவாய்ந்த விவசாயிகளுக்கு ரூ.2.59 லட்சம் கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் சங்கரய்யா காலமானார்!
14-ஆவது தவணையான ரூ.17,000 கோடியை கடந்த ஜூலை மாதத்தில் பிரதமர் மோடி விடுவித்து, 8.5 கோடி விவசாயிகள் பயனடைந்தனா். இந்த நிலையில், விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் கீழ் 15-ஆவது தவணை தொகையை பிரதமர் நரேந்திர மோடி இன்று விடுவிக்கிறார். 8 கோடிக்கு மேலான விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.18,000 கோடியை பிரதமர் மோடி இன்று விடுவிக்கிறார்.
பழங்குடி பெருமை நாளையொட்டி ஜார்கண்ட் பரப்புரை கூட்டத்தில் 15-ஆவது தவணை தொகை விடுவிக்கப்பட உள்ளது. சமூக போராளி பிர்சா முண்டாவின் பிறந்தநாள் பழங்குடி பெருமை தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் விவசாயிகளுக்கான நிதியுதவி தொகை விடுவிக்கப்பட உள்ளது.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…