PM Modi Tweet to support Isrel [File Image]
காசா பகுதி தங்களுடையது எனக் கூறி இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக பிரச்சனைகள் நடந்து வந்த நிலையில், மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூண்டுள்ளது. தொடர்ந்து நான்கு நாட்களாக இஸ்ரேல் – ஹமாஸ் இடையே மாறிமாறி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே நடைபெற்று வரும் தாக்குதலில், 1700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அங்கு நொடிக்கு நொடி பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில்,போர் காரணமாக காசா பகுதியிலிருந்து 1.2 லட்சம் மக்கள் வெளியேறி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், காசாவிற்கு எரிபொருள், உணவு எடுத்துச் செல்ல அனுமதியில்லை என இஸ்ரேல் அறிவித்துள்ளது. இந்த நிலையில், தற்போது காஸாவை சுற்றியுள்ள பகுதிகளை கைப்பற்றிவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. வான்வழி மற்றும் பீரங்கிகள் மூலம் ஹமாஸ் குழுவினர் மீது இஸ்ரேல் படையினர் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், பிரதமர் மோடியுடன் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தொலைபேசி மூலமாக பேசி உள்ளார். இது குறித்து பிரதமர் மோடி அவர்கள் தனது எக்ஸ் தள பக்கத்தில், தொலை பேசியில் நாட்டின் தற்போதைய நிலை குறித்து பேசிய இஸ்ரேல் பிரதமருக்கு, பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும், கடினமான நேரத்தில் இந்தியர்கள் இஸ்ரேலுடன் உறுதுணையாக இருப்பர். பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்கள், வெளிப்பாடுகளை இந்தியா கடுமையாக கண்டிக்கிறது என பதிவிட்டுள்ளார்.
சென்னை : 2 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா நேற்றிரவு 11:30…
சென்னை : 2026 சட்டப்பேரவை தேர்தலை கவனத்தில் கொண்டு தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் செயல்பட்டு வருகிறார்.…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், டெல்லி அணியும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மோதுகிறது. இந்த…
சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அஜித்…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில்…