21 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

21 மாநில முதலமைச்சர்களுடன் வீடியோ கான்பிரன்சிங் மூலமாக பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
கொரோனா பரவல் தொடங்கியதும் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.ஒரு சில தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளது.ஆனாலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இதற்குஇடையில் தான் பிரதமர் நரேந்திர மோடி மாநில முதலமைச்சர்களுடன் ஆலோனை மேற்கொண்டு கொரோனா நிலவரங்கள் குறித்து அறிந்து வருகிறார். அந்த வகையில் இன்று கேரளா,பஞ்சாப்,கோவா உள்ளிட்ட 21 மாநில முதலமைச்சர்களுடன் வீடியோ கான்பிரன்சிங் மூலமாக பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
அப்பொழுது அவர் பேசுகையில், கொரோனா பரவலில் மற்ற நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவில் பெரிய பாதிப்பு இல்லை.கொரோனா தொற்று பரவலுக்கு முன்னரே இந்தியா முன்னெச்சரிக்கையாக இருந்தது என்று பேசினார்.