நாளை காலை 11 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி உரை.!
பிரதமர் மோடி தனது வானொலி நிகழ்ச்சியான ‘மான் கி பாத்’ மூலம் நாளை காலை 11 மணிக்கு உரையாற்றவுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, கடந்த மார்ச் 24-ஆம் தேதி பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அதன் பிறகு அவ்வபோது நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அதுமட்டுமல்லாமல் மாதந்தோறும் “மான் கி பாத்” நிகழ்ச்சி மூலமும் வானொலி வாயிலாக மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
மேலும், பிரதமர் மோடி கொரோனோ தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அவ்வப்போது அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாளை வானொலி நிகழ்ச்சியான ‘மான் கி பாத்’ மூலம் காலை 11 மணிக்கு உரையாற்றவுள்ளார்.