பிரதமர் நரேந்திர மோடி 125 ரூபாய் சிறப்பு நாணயத்தை நாளை வெளியிடவுள்ளார்.
ஸ்ரீல பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதாவின் 125 வது பிறந்தநாளை முன்னிட்டு நாளை வீடியோ கான்பரன்சின் மூலம் பிரதமர் நரேந்திர மோடி 125 ரூபாய் சிறப்பு நாணயத்தை வெளியிடுகிறார்.
மேலும்,இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
“பிரதமர் நரேந்திர மோடி ரூ.125 என்ற சிறப்பு நினைவு நாணயத்தை வெளியிடுகிறார், மேலும் ஸ்ரீல பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதாஜியின் 125 வது பிறந்தநாளை முன்னிட்டு செப்டம்பர் 1 ஆம் தேதி 2021 அன்று மாலை 4:30 மணிக்கு காணொலி காட்சி மூலம் உரையாற்றுகிறார்.
ஸ்ரீல பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதாஜி, “ஹரே கிருஷ்ணா இயக்கம்” என்று பொதுவாக அறியப்படும் கிருஷ்ண உணர்வுக்கான சர்வதேச சங்கத்தை (இஸ்கான்) நிறுவினார்.இந்த சங்கம் ஸ்ரீமத் பகவத் கீதை மற்றும் இதர வேத இலக்கியங்களை 89 மொழிகளில் மொழி பெயர்த்து, வேத இலக்கியத்தை உலகம் முழுவதும் பரப்புவதில் சிறப்பான பங்கை வகிக்கிறது.
மேலும்,சுவாமி பிரபுபாதாஜி நூற்றுக்கும் மேற்பட்ட கோவில்களை நிறுவி, பல புத்தகங்களை எழுதி, பக்தி யோகாவின் பாதையை உலகிற்கு கற்பித்தார்”,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும்,இந்த நிகழ்ச்சியில் மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி உள்ளிட்டவர்கள் கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக,பிரதமர் மோடி,75 ரூபாய் மற்றும் 100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
துபாய் : நேற்று இந்திய கிரிக்கெட் அணி, கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் 2வது ஐசிசி கோப்பையை கைப்பற்றியது. 2025…
துபாய் : துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை நான்கு…
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில் கலந்து கொண்டு மத்திய கல்வி…
டெல்லி : இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில்…
ஸ்ரீவைகுண்டம் : தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பொதுத்தேர்வுக்கு சென்ற 11ஆம் வகுப்பு மாணவனை ஓடும் பஸ்ஸில் மர்ம கும்பல்…
டெல்லி : மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் தமிழ்நாட்டுக்கு நிதி கொடுக்கப்படும் என கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது…