போபால் – புதுடெல்லி வந்தே பாரத் ரயிலை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.!
பிரதமர் மோடி இன்று போபால் மற்றும் புதுடெல்லி இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை தொடங்கி வைப்பதற்காக மத்திய பிரதேசம் வருகை.
பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப்ரல் -1) மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ராணி கமலாபதி நிலையத்தில் போபால் மற்றும் புதுடெல்லி இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
நாட்டின் போபால் – புதுடெல்லி இடையேயான 11-வது வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று மத்தியப் பிரதேச மாநிலதிற்கு வருகை தருகிறார்.
மேலும், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைப்பதற்கு முன் போபாலில் உள்ள குஷாபாவ் தாக்ரே ஹாலில் நடைபெறும் ஒருங்கிணைந்த இராணுவத் தளபதிகள் மாநாடு-2023 இல் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.