இன்று 2 மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி!
பிரதமர் நரேந்திர மோடி இன்று மணிப்பூர் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று மணிப்பூர் மற்றும் திரிபுரா மாநிலங்களுக்குச் சென்று பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைக்கவுள்ளார்.அதன்படி,காலை 11 மணியளவில்,பிரதமர் மணிப்பூரின் இம்பாலில் ரூ.4,800 கோடி மதிப்பிலான 22 வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
அந்த வகையில்,மணிப்பூரில் சுமார் ரூ.1,850 கோடி மதிப்பிலான 13 திட்டங்களை பிரதமர் தொடங்கி வைப்பார் மற்றும் ரூ.2,950 கோடி மதிப்பிலான ஒன்பது திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெரிவிக்கிறது.
நாடு தழுவிய இணைப்புத் திட்டங்களை மேம்படுத்தும் வகையில், இம்பாலில் ரூ.1700 கோடிக்கும் அதிகமான செலவில் கட்டப்படும் ஐந்து தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களின் கட்டுமானப் பணிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளார்.இம்பாலில் இருந்து சில்ச்சாருக்கு ஆண்டு முழுவதும் தொடர்பை மேம்படுத்தும் மற்றும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் மற்றொரு முக்கியமான உள்கட்டமைப்பு,ரூ.75 கோடி செலவில் கட்டப்பட்ட NH-37 இல் பராக் ஆற்றின் மீது கட்டப்பட்ட ஸ்டீல் பாலம் ஆகும். இந்த ஸ்டீல் பாலம் இன்று பிரதமரால் திறந்து வைக்கப்படுகிறது.
அதன்பிறகு,பிற்பகல் 2 மணியளவில்,திரிபுராவின் அகர்தலாவில் உள்ள மகாராஜா பிர் பிக்ரம் விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடத்தை பிரதமர் திறந்து வைக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
PM Narendra Modi to visit Manipur and Tripura today. PM will inaugurate & lay the foundation stone of 22 developmental projects worth over Rs 4800 Cr in Imphal and will inaugurate the New Integrated Terminal Building at Maharaja Bir Bikram Airport in Agartala: PMO
(file pic) pic.twitter.com/iHSvZdsSbl
— ANI (@ANI) January 4, 2022