ராஜஸ்தானில் அமைதியின் சிலை என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள சிலையை திறந்து வைத்துள்ளார் பிரதமர் மோடி.
ராஜஸ்தான் மாநிலம், பாலியில் உள்ள ஜேத்புரா விஜய் வல்லப் சாதனா மையத்தில் “அமைதி சிலை” அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ விஜய் வல்லப் சுரிஷ்வர் ஜி மகாராஜின் ( Shree Vijay Vallabh Surishwer Ji Maharaj) 151 வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி ராஜஸ்தானின் பாலி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள “அமைதி சிலையை ” வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.151 அங்குல உயரமுள்ள இந்த சிலை எட்டு உலோகங்கள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இவர் 1870-1954 காலப்பகுதியில் வாழ்ந்த துறவி.வெகுஜன நலனுக்காகவும், கல்வியின் பரவலுக்காகவும், சமூக தீமைகளை ஒழிப்பதற்காகவும் இவர் அயராது உழைத்தார், எழுச்சியூட்டும் இலக்கியங்களை எழுதியுள்ளார். மேலும், சுதந்திர இயக்கத்திற்கும், சுதேசியின் காரணத்திற்கும் தீவிரமான ஆதரவை வழங்கினார். அவரது உத்வேகத்துடன், கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் ஆய்வு மையங்கள் உட்பட 50 -க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் பல மாநிலங்களில் செயல்பட்டு வருகின்றன.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த போது, துணை…
சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…
மும்பை : டெல்லி அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக விளையாடி வந்த ரிஷப் பண்டை…
இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…