அமைதியின் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

Default Image

ராஜஸ்தானில் அமைதியின் சிலை என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள சிலையை திறந்து வைத்துள்ளார்  பிரதமர் மோடி.

ராஜஸ்தான் மாநிலம், பாலியில் உள்ள ஜேத்புரா விஜய் வல்லப் சாதனா மையத்தில் “அமைதி சிலை” அமைக்கப்பட்டுள்ளது.    ஸ்ரீ விஜய் வல்லப் சுரிஷ்வர் ஜி மகாராஜின் ( Shree Vijay Vallabh Surishwer Ji Maharaj) 151 வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி ராஜஸ்தானின் பாலி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள  “அமைதி சிலையை ” வீடியோ கான்பரன்சிங் மூலம்  திறந்து வைத்தார்.151 அங்குல உயரமுள்ள இந்த சிலை எட்டு உலோகங்கள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இவர் 1870-1954 காலப்பகுதியில் வாழ்ந்த துறவி.வெகுஜன நலனுக்காகவும், கல்வியின் பரவலுக்காகவும், சமூக தீமைகளை ஒழிப்பதற்காகவும் இவர் அயராது உழைத்தார், எழுச்சியூட்டும் இலக்கியங்களை எழுதியுள்ளார். மேலும், சுதந்திர இயக்கத்திற்கும், சுதேசியின் காரணத்திற்கும் தீவிரமான ஆதரவை வழங்கினார். அவரது உத்வேகத்துடன், கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் ஆய்வு மையங்கள் உட்பட 50 -க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் பல மாநிலங்களில் செயல்பட்டு வருகின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்