யாஸ் புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட பகுதிகளை,பிரதமர் நரேந்திர மோடி இன்று நேரில் ஆய்வு செய்ய உள்ளார்.
மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் அதி தீவிரப் புயலாக வலுப்பெற்ற யாஸ் புயல்,ஒடிசா-மேற்கு வங்கம் இடையே கடந்த 26 ஆம் தேதியன்று ஒடிசாவின் பாலசோர் பகுதியில்,முழுவதுமாக கரையை கடந்து,மெதுவாக வடக்கு மற்றும் வடமேற்கு திசை குறிப்பாக ஜார்கண்ட் நோக்கி நகர்ந்துள்ளது.
இருப்பினும்,புயல் கரையைக் கடக்கும்போது,ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் 130 முதல் 155 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசியதால் வீடுகள் மற்றும் கட்டிடங்களின் கூரைகள் காற்றில் பறந்தன.
இதனையடுத்து,யாஸ் புயலால் இதுவரை 4 பேர் பலியாகியுள்ளனர் என்ற முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.இறந்தவர்களில் ஒடிசாவில் மூன்று பேர் மற்றும் மேற்குவங்கத்தை சேர்ந்த ஒருவர் என்ற தகவல் கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து,புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில்,”அதி தீவிரமாக வீசிய புயலால் குறைந்தது ஒரு கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்,3 லட்சம் வீடுகள் சேதமடைந்துள்ளன.இந்த யாஸ் புயலின் தாக்கத்தால் மேற்கு வங்கம் மிகவும் நிலைக்குலைந்துள்ளது”,என்று தெரிவித்தார்.
இந்நிலையில்,யாஸ் புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளார்.அதன்படி,பிரதமர் முதலில் புவனேஷ்வர் சென்று,அங்கு அவர் மறுஆய்வுக் கூட்டத்தை நடத்தவுள்ளார்,பின்னர் பாதிக்கப்பட்ட பகுதிகளான பாலசோர், பத்ராக் மற்றும் பூர்பா மெடினிபூர் ஆகிய இடங்களில் வான்வழி ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்,பின்னர்,மேற்கு வங்கத்தில் நடைபெறும் மறுஆய்வுக் கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளார் என்று ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…