6 புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

Default Image

நமாமி கங்கா திட்டத்தின் கீழ் பிரதமர் மோடி 6 புதிய திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார்.

உத்தரகண்ட் மாநிலத்தில்  கங்கை ஆற்றின்  கலாச்சாரம் மற்றும்  வரலாறு ஆகியவற்றை வெளிப்படுத்த  கங்கை பற்றிய ஒரு அருங்காட்சியையும் தொடங்கிவைத்துள்ளார்.கங்கை நீரை சுத்தம் செய்யும் வகையில் 6 புதிய திட்டங்களை  தொடங்கி வைத்துள்ளார். சந்தேஷ்வர் நகரில் நாட்டிலேயே முதன் முறையாக  4 அடுக்குமாடியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளது. நாள் ஒன்றுக்கு இங்கு  7.5 மில்லியன் லிட்டர் நீர் சுத்திகரிப்பு செய்யலாம்.

ஏற்கனவே பிரதமர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலில்,உத்தரகண்ட் மாநிலத்தில் கங்கை நீரை சுத்தம் செய்வதற்கான அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் மூலம் கங்கை ஆற்றுக்கு அருகில் இருக்கும் 17 நகரங்களும் தூய்மையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹரித்வார் மற்றும் ரிஷிகேஷ் மாவட்டங்களில் கங்கை ஆற்றில் சுமார் 80% கழிவு நீர் சுத்தகரிக்கப்படுகிறது.இதனால் அங்கு முதலில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை திறந்து வைப்பதினால் கங்கையை சுத்தமாக வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்