16-வது வெளிநாடு வாழ் இந்தியர்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
16-வது வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
வெளியுறவு விவகாரங்கள் அமைச்சகத்தின் நிகழ்ச்சியான வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாடு,வெளி நாடுகளில் வாழும் இந்தியர்களுடன் இணைப்பை ஏற்படுத்தும், அவர்களை ஈடுபடுத்தும் முக்கிய தளமாக விளங்குகிறது.
தற்போதைய கொரோனா பெருந்தொற்றுக்கு இடையிலும், 16-வது வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாடு இன்று நடத்தப்படுகிறது. மாநாட்டுக்கு முன் நடைபெற்ற வெளிநாடு வாழ் இந்தியர்கள் கூட்டங்களைப் போலவே, மெய்நிகர் முறையில் மாநாடும் நடத்தப்படும். “தற்சார்பு இந்தியாவுக்கு பங்காற்றுதல்” என்பது வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டின் மையக்கருவாக இருக்கும்.வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாடு மூன்று பிரிவுகளை கொண்டிருக்கும். பிரதமர் நரேந்திர மோடியால் துவக்கி வைக்கப்படுகிறது.