தெரசா மேவிடம்  பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் ..!

Default Image

இந்திய சிறைகளின் வசதி குறித்து விஜய் மல்லயாவுக்காக கேள்வி எழுப்புவது முறையல்ல என இங்கிலாந்து பிரதமர் தெரசா மேவிடம்  பிரதமர் நரேந்திர மோடி கூறியதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கேள்விகளுக்கு பதிலளித்த சுஷ்மாசுவராஜ், இங்கிலாந்து பிரதமருடனான சந்திப்பின் போது பிரதமர் நரேந்திர மோடி பேசியதாக சில தகவல்களை வெளியிட்டார்.

இந்தியாவில் காந்தியையும், நேருவையும் பிரிட்டிஷ் அரசு எந்த சிறையில் அடைத்ததோ, அதே சிறைகள் தான் தற்போதும் உள்ளன என பிரதமர் குறிப்பிட்டதாகவும், ஆனால் இந்த சிறைகளின் நிலை குறித்து மல்லயாவுக்காக இங்கிலாந்து நீதிமன்றம் கேள்வி எழுப்புவது சரியல்ல என பிரதமர் மோடி குறிப்பிட்டதாகவும் சுஷ்மா சுவராஜ் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்