2வது தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழா -இன்று பிரதமர் நரேந்திர மோடி உரை
இன்று காலை 10.30 மணிக்கு நடைபெறும், 2வது தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவின் இறுதிநாள் நிழ்ச்சியில்,பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் உரையாற்றுகிறார். இந்நிகழ்சியில், தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவில், தேசியளவில் வெற்றி பெற்ற 3 பேர், தங்கள் கருத்துக்களை கூறுவார்கள்.மக்களவை சபாநாயகர், மத்திய கல்வி அமைச்சர் மற்றும் மத்திய விளையாட்டுத்துறை இணையமைச்சர் ஆகியோர் இதில் கலந்து கொள்கின்றனர்.
தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழா :
ஓட்டுப்போடவும், அரசுப் பணியில் சேரவும் அனுமதிக்கப்படும் 18 வயது முதல் 25 வயதுக்கு உட்பட இளைஞர்களின் கருத்துக்களை கேட்பதே தேசிய இளைஞர் நாடாளுமன்ற திருவிழாவின் நோக்கம். கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி நடந்த மனிதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் தெரிவித்த யோசனைப்படி நடத்தப்படுவதுதான் தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழா.