மெட்ரோ ரயில் திட்டங்கள் – அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

Default Image

மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

குஜராத் ஆளுநர், மத்திய உள்துறை அமைச்சர், குஜராத் முதல்வர் மற்றும் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சர் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் சூரத் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.இதன் பின் பிரதமர் மோடி பேசுகையில்,இன்று உலகின் மிகப்பெரிய சிலை இந்தியாவில் உள்ளது. மிகப்பெரிய மலிவு வீட்டுவசதி திட்டம் இந்தியாவில் இயங்கி வருகிறது.மிகப்பெரிய சுகாதார காப்பீட்டு திட்டம் இந்தியாவில் இயங்குகிறது.6 லட்சம் கிராமங்களை வேகமாக இணையத்துடன் இணைக்கும் பணியும் இந்தியாவில் நடந்து வருகிறது.17 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் மதிப்புள்ள திட்டங்களுக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.கொரோனா நிலவும் சோதனை காலத்திலும் தேசத்தின் வளர்ச்சிக்கான எங்களது அர்ப்பணிப்பை இது வெளிப்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்