குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துடன், பிரதமர் மோடி சந்தித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாகி வரும் நிலையில் லடாக்கில் உள்ள கல்வான் பகுதியில் கடந்த மாதம் 15-ம் தேதி இந்தியா மற்றும் சீனா வீரர்கள் இடையே நடைபெற்ற மோதலால் அங்கு தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டு வந்தது. இதனால், இருநாடுகளும் தங்களது படைகளை குவித்து வந்தன.
இதைத்தொடர்ந்து, ராணுவ அதிகாரிகள், தூதரக அதிகாரிகள் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொடர்ந்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையால் ஒருமித்த கருத்து ஏற்பட்டதை தொடர்ந்து இருநாட்டு படைகளை விலக்கிக் கொள்ள ஒப்புதல் அளித்தனர்.இதனிடையே எந்த வித முன் அறிவிப்பு இன்றி பிரதமர் மோடி , தலைமை தளபதி பிபன் ராவத்தும் உடன் லடாக் சென்றார். நிம்பு பகுதிக்கு சென்ற மோடி அங்கு உள்ள இராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றினார்.இதன் பின் தனது பயணத்தை பிரதமர் மோடி முடித்துக்கொண்டார்.
இந்நிலையில் இன்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை , பிரதமர் மோடி சந்தித்துள்ளார்.இந்த சந்திப்பில் , தேசிய மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து விளக்கம் அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.லடாக் விவகாரம் பெரிய அளவில் பேசப்பட்டு வரும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சென்னை : ஒரே நேரத்தில் 2 படங்களில் நடித்து வருவதுடன், கார் ரேஸிலும் பங்கேற்று வருகிறார் அஜித் குமார். மகிழ்…
டெல்லி : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
மாஸ்கோ : ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் நீடித்துக் கொண்டே வருகிறது. சமீபத்தில், உக்ரைன் அதிபர்…
வயநாடு : கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைதேர்தல் கடந்த நவம்பர் 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில்…
சென்னை : நடைபெற்ற மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…