மத்திய அரசு அனுமதி மறுப்பு.! ஜனநாகயத்திற்கு அவமரியாதை.! சோனியா காந்தி விமர்சனம்.!
இந்தியா-சீனா மோதல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அனுமதி மறுக்கிறது. – சோனியா காந்தி குற்றசாட்டு.
இந்தியா சீனா எல்லையான அருணாச்சல பிரதேசம் தவாங் பகுதியில் அண்மையில் இந்திய ராணுவம் மற்றும் சீன ராணுவம் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் அத்துமீறிய சீன ராணுவத்தை இந்திய ராணுவம் விரட்டி அடித்தது.
இந்த எல்லை மோதல் குறித்து, மாநிலங்களவையில் பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது.
இது குறித்து காங்கிரஸ் முக்கிய தலைவர் சோனியா காந்தி, தவாங்கில் நடந்த இந்தியா-சீனா மோதல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அனுமதி மறுக்கிறது. இது ஜனநாயகத்திற்கு அவமரியாதை ஏற்படுத்தும் செயலாகும் என தனது எதிர்ப்பை சோனியா காந்தி தெரிவித்தார்.